கொரொனாவுக்கு எதிரான புதிய மருந்து..! ஒரு டோசின் விலை 59 ஆயிரம்..!
பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ரோச் கொரொனாவுக்கு எதிரான மருந்து ஒன்றை தயாரித்து அறிமுகம் செய்திருக்கிறது. ரோச்சன் கோவிட் -19 ஆன்டிபாடி என அழைக்கப்படும் இந்த மருந்தை பயன்படுத்தி கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த மருந்து லேசான பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கும் தேவை குறைவதாகவும் உயிரிழப்பு 70 சதவீதம் வரை குறைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு டோஸ்கள் கொண்ட ஒரு பாக்கெட்டை இரண்டு நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம். அதில் ஒரு டோஸ் 59 ஆயிரத்து 750 ரூபாய் ஆகும். இரண்டும் இணைந்த பாக்கெட்டின் விலை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.




