--- --:--:-- --

பணியாளர்களை மிரட்டி மதுபான பெட்டியை அபகரித்து சென்ற இளைஞர்கள்..!

4

தூத்துக்குடி பகுதியில் அரசு மதுபான கடைக்கு லாரிகள் வந்த மது பாட்டில்கள் அடங்கிய பெட்டியை பணியாளர்களை மிரட்டி இரண்டு இளைஞர்கள் அபகரித்து சென்றனர். டாஸ்மாக் கடைக்கு லாரிகள் வந்த மதுபானங்களை லாரியில் இருந்து பணியாளர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் பணியாளர்களை மிரட்டி மதுபானங்களில் இருந்த ஒரு பெட்டியை அபகரித்து சென்றனர். டாஸ்மாக் ஊழியர்கள் இளைஞர்களை பிடிக்க முயன்ற பொழுது பைக்கில் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

 

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தந்தாலும் முறையாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் இதனால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளதாகவும் பணியாளர்கள் கூறுகின்றனர்.

 

டாஸ்மாக் கடையில் நடைபெறும் அபகரிப்புகள் மற்றும் இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon