மருத்துவர் எங்கே எனக் கேட்டு வீடியோ எடுத்த இளைஞர்..ஆத்திரத்தில் செவிலியர் செய்த செயல்..!
திட்டக்குடி அருகே மருத்துவமனைக்கு மருத்துவர் எப்போது வருவார் என கேட்டு வீடியோ எடுத்த நபரின் செல்போனை செவிலியர் பறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் காத்திருந்த நிலையில் நீண்ட நேரம் மருத்துவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
அப்போது சிகிச்சைக்காக வந்திருந்த இளைஞர் ஒருவர் பணியில் இருந்த செவிலியரிடம் இரவு மருத்துவம் பார்த்த மருத்துவர் எங்கே என கேட்டு வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செவிலியர் அந்த வாலிபரிடம் செல்போனை பறிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.





