மாடியிலிருந்து திடீரென்று மயங்கி கீழே சரிந்து விழுந்தவரை காப்பாற்றிய இளைஞர்..!
மாடியிலிருந்து திடீரென்று மயங்கி கீழே சரிந்து விழுந்த இளைஞரை அருகில் இருந்த மற்றொருவர் காலைப்பிடித்து காப்பாற்றிய சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் பாபு.
இவர் வடகரையில் உள்ள கிராம வங்கி ஒன்றுக்கும் பணம் செலுத்த சென்றுள்ளார். வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் முதல் மாடியில் உள்ள சுவற்றில் சாய்ந்து கொண்டு சென்றுள்ளார். அப்போது அருகே இருந்த இளைஞரும் சுவற்றில் சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்துள்ளார்.
இந்த சமயத்தில் திடீரென்று அப்படியே மயங்கி பின்னால் சரிந்து உள்ளார். இதைக்கண்ட பாபு உடனடியாக வினுவின் காலை பிடித்துக் கொண்டுள்ளார். இதனால் வினு அந்தரத்தில் அப்படியே தங்கியுள்ளார்.
அருகில் இருந்த பெரியவர் ஒருவர் உடனடியாக உதவிக்கு ஓடி வந்துள்ளார். பின்னர் வங்கியில் இருந்தவர்களும் உதவிக்கு வர அவர் மீட்கப்பட்டுள்ளார்.






