தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு..!
வளிமண்டலத்தில் நடக்கும் சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி குறிப்பில் இலங்கைக்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை இடி மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






