--- --:--:-- --

மகாராஷ்டிரா, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள் முதலிடம்

9

டப்பு கல்வியாண்டில் நாடு முழுவதும் மொத்தம் 1.36 லட்சம் எம்.பி.பி.எஸ் (MBBS) மருத்துவ இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 441 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் 63,296 இடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தமட்டில், அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 6,000 இடங்களும், அதற்கு அடுத்தபடியாகத் தமிழ்நாட்டில் 5,349 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலமாக நாடு முழுவதும் 73,643 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon