65 வயதுக்கு மேற்பட்டோருக்கு மீண்டும் கொரொனா தொற்றும் அபாயம் உள்ளது..!
65 வயதுக்கு மேற்பட்டோர் ஏற்கனவே தொற்றுக்கு ஆளாகி இருந்தால் அவர்களுக்கு மீண்டும் தொற்று தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற லான்செட் என்ற மருத்துவ பத்திரிகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதில் குணமடைந்தவர்களில் 65 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அந்த தொற்றால் மீண்டும் ஏற்படும் அபாயம் 20% மட்டுமே உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தொற்றில் இருந்து மீண்ட 65 வயதுக்கு மேற்பட்டோரில் 53 சதவீதம் பேருக்கும் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. எனினும் உருமாறிய கொரொனா வைரஸ் தாக்கும் பட்சத்தில் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதற்கு விரிவான ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் அந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.






