மனைவியின் தங்கையை காதலித்ததை தட்டிக்கேட்டவரை குத்திக் கொன்ற இளைஞர்..!
கொடைக்கானலில் மனைவியின் தங்கையை காதலித்தவரை தட்டிக்கேட்டவரை குத்திக் கொன்ற இளைஞரை போலீஸார் தேடிவருகின்றனர். சுரேந்திர குமாரும் அதே ஊரை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்ததாக கூறப்படுகிறது.
இதை சிறுமியின் அக்காள் கணவர் கண்டித்த நிலையில் நேற்று இரவு ஊர் திருவிழாவின்போது காதலர்கள் இருவரும் செல்போனில் பேசியதால் சுரேந்திர குமாருடன் சிறுமியின் மாமா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவரும் குடிபோதையில் இருந்ததால் வாக்குவாதம் முற்றி மோதல் ஆக மாறிய நிலையில் ஆத்திரமடைந்த சுரேந்திர குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து சிறுமியின் மாமாவை நெஞ்சில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.






