--- --:--:-- --

உலகின் பிரம்மாண்ட எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ளது..!

2

லகின் பிரம்மாண்ட கப்பல்களில் ஒன்றான எவர்கிரீன் எனும் கப்பல் சூயஸ் கால்வாய் நடுவில் சிக்கிக் கொண்டதால் பல நூற்றுக்கணக்கான கப்பல்கள் போக வழியின்றி நடுக்கடலில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர் நாடியாக விளங்கும் சூயஸ் கால்வாயில் ஓராண்டில் மட்டும்சுமார் 15 ஆயிரம் கப்பல்கள் கடந்து செல்கின்றன. இந்த நிலையில் உலகின் பிரமாண்ட கப்பல் களில் ஒன்றான எவர்கிரீன் எனும் கப்பல் கால்வாய் நடுவில் சிக்கிக் கொண்டதால் அங்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

எவர்கிரீன் கப்பல் சீனாவில் இருந்து நூற்றுக்கணக்கான கண்டெய்னருடன் நெதர்லாந்து நோக்கிப் புறப்பட்டு 22வது தேதி எகிப்திலுள்ள சூயஸ் கால்வாய் வந்தடைந்தது. மார்ச் 23ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டு இலங்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென வீசிய சூறாவளி காற்றால் கட்டுப்பாட்டை இழந்த கப்பல் கால்வாயின் குறுக்கே நகர முடியாமல் சிக்கிக் கொண்டது.

 

நாளொன்றுக்கு சுமார் ஒரு மில்லியன் பீப்பாய் எண்ணெய் வெளியே எடுத்துச் செல்லப்படும் நிலையில் போக்குவரத்து முடங்கியுள்ளதால் உலக வர்த்தக பொருளாதார சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

Leave a Reply

Right Menu Icon