அடுத்தடுத்து கிணற்றில் விழுந்த பெண்கள்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் புனல் காடு கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலையடி வாரத்தில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் காடுகளை அழித்து மாவட்ட நிர்வாகம் குப்பைகளை கொட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று மீண்டும் சுற்றுச்சூழல் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தை சேர்ந்த குமாரி மற்றும் நிர்மல் ஆகிய இரண்டு பெண்கள் அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக இன்று சுற்றுச்சூழல் காட்டும் பணியில் காவல்துறை உதவியுடன் மாவட்ட நிர்வாகம் தொடங்கியது. இதனை கட்டக்கூடாது எனவும் தங்களது கிராமத்தில் குப்பைக்கடங்கு அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என தெரிவித்து கிராம மக்கள் தற்கொலைக்கும் முயற்சி செய்து உள்ளனர்.





