மகள், மருமகனை முதலைக்கு இரையாக்கிய தந்தை..!
மத்திய பிரதேசத்தில் மகள் மற்றும் காதலனை கௌரவக் கொலை செய்த முதலைகள் நிரம்பிய ஆற்றில் தந்தை வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம் மொராதாவை சேர்ந்தவர் இளம்பெண்.
இவர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பை நெறி ஷிவானி தங்கள் காதலை தொடர்ந்தார்.
இந்நிலையில் மூன்றாம் தேதி காணாமல் போனார். அதே தேதியில் சிவானியையும் காணவில்லை. எதிர்ப்புக்கு பயந்து இருவரும் ஓடி விட்டதாக அந்த இளைஞனின் குடும்பத்தினர் நம்பினர். போலீஸில் புகார் அளித்தனர்.
அதன் பெயரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதில் பெண்ணின் தந்தையிடம் நடத்திய விசாரணையில் மகளையும் காதலனையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவர் ஜூன் 3ம் தேதி இருவரையும் சுட்டுக்கொன்ற பிறகு அவர்களின் உடல்களில் இரண்டு கற்களை கட்டி முதலை நிறைந்த ஆற்றில் வீசியதாக போலீசிடம் தெரிவித்தார். இது போலீசாரை அதிர வைத்தது.





