லேப்டாப்புகளை அபேஸ் செய்த பெண்..!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொடர் லேப்டாப் திருட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்திரா நகர் கோரமங்கலம் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் தனியார் விடுதிகளில் அடிக்கடி லேப்டாப் திருடு போவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெசி அகர்வால் என்ற பெண்ணை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் வங்கியின் ஊழியராக பணியாற்றி வந்த அந்த பெண் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு முழு நேரமாக லேப்டாப் திருடுவதில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கிறது.
உணவகம் மற்றும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்குவது போல நடித்து பக்கத்து அறையில் இருப்பவர்கள் உணவருந்த சென்ற நேரத்தில் அந்த பெண் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கைதான ஜெயி அகர்வாலிடமிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 24 மடிக்கணினிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.





