--- --:--:-- --

பாம்போடு நெற்கதிர் கட்டைத் தூக்கிச் சென்ற பெண்..!

5

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெண் ஒருவர் நெற்கதிர்களோடு பாம்பையும் சேர்த்து தூக்கி சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.முத்து பட்டியை சேர்ந்த சின்னையா என்பவரது தோட்டத்தில் நெற்கதிர் அறுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

 

அப்பொழுது நெற்கதிர்களை கட்டி பெண் தொழிலாளி ஒருவர் தலையில் சுமந்து சென்றார். கட்டில் நெளிந்து கொண்டிருப்பதை உணர்ந்த பெண் நெற்கதிர் கட்டை கீழே போட்டுவிட்டு பார்த்தபோது அதில் 5 அடி நீள சாரை பாம்பு ஒன்று படுத்துக் கொண்டு இருந்ததைக் கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தார்.

 

தகவலறிந்து வந்த போலீசார் பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

 

Right Menu Icon