அம்மா மினி கிளினிக் மூடல் குறித்து விவாதம்..!
கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் தற்காலிக திட்டம் தான் எனவும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கியதால் அவற்றை மூடி விட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேரவையில் விளக்கமளித்தார்.
சில மினி கிளினிக்குகளில் முறையாக மருத்துவர்கள் நியமிக்கப்படாததோடு, கழிவறைகளிலும், மயானங்களிலும் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் சுப்பிரமணியன் அம்மா மினி கிளினிக் திட்டத்தை சிறுமைப் படுத்துவது போல் பேசுவதாகவும் அதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அறிவித்தார்.
அப்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆதாரத்தோடு பேசியதாகவும் தேவைப்பட்டால் இன்று மாலையே அம்மா மினி கிளினுக்குகள் செயல்பட்ட இடங்களை காட்ட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.





