--- --:--:-- --

கணவரிடம் தன் நகைகளை கொடுத்த பெண் மர்ம மரணம்..!

9

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமணத்திற்காக போடப்பட்ட நகைகளை கணவரிடம் கொடுத்த ஒரு மணி நேரத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கூலாங்கல்சேரி பகுதியை சேர்ந்த சுரேஷ் மோகனாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகி உள்ள நிலையில் மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. சுரேஷ் மூன்று ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்துவிட்டு கடந்த பிப்ரவரியில் வீடு திரும்பியுள்ளார்.

 

மனைவி மோகனாவிடம் திருமணத்திற்காக போடப்பட்ட 25 சவரன் நகைகளை சுரேஷ் கேட்டுள்ளார். இதையடுத்து பெற்றோர் வீட்டில் இருந்த நகைகளை சகோதரர் மூலம் கொண்டுவரச் சொல்லி சுரேஷ் இடம் கொடுத்துள்ளார். பின்னர் ஒரு மணி நேரத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதாக மோகனாவின் பெற்றோரிடம் சுரேஷ் கூறியுள்ளார்.

 

தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon