--- --:--:-- --

கணவருக்கு படுக்கை வசதி செய்து தரக்கூறி கெஞ்சிய பெண்..! உயிரிழந்த கணவர்..!

8

ர்நாடகாவில் படுக்கை வசதி செய்து தர வேண்டி முதலமைச்சர் இல்லம் வரை சென்று பெண் கணவருக்காக போராடியுள்ளார். அப்பெண்ணின் கணவருக்கு படுக்கை ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடகாவை சேர்ந்தவர் சதீஷ். அவசர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி ஏற்படுத்தி தர கோரி முதலமைச்சர் எடியூரப்பா இல்லாமல் தர்ணாவில் ஈடுபட்டார். 10 மருத்துவமனைக்கு மேல் ஏறி இறங்கியும் படுக்கை கிடைக்காததால் பல மணி நேரமாக அங்கு சுற்றித் திரிவதாகவும் மஞ்சுளா தெரிவித்தார்.

 

தனி ஒரு ஆளாக நடத்திய போராட்டத்தின்போது தனக்கு அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம் என்றும் படுக்கை மட்டும் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து முதல்வர் அலுவலகம் சதீஷ்க்கு படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுத்தது.

 

ஆனால் துரதிருஷ்டவசமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சதீஷ் உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon