--- --:--:-- --

தலைமுடியால் பேருந்தை இழுத்து சாதனை படைத்த பெண்..!

8

லை முடியால் பேருந்தை இழுத்து சாதனை படைத்துள்ளார் ஒரு இளம்பெண். பஞ்சாப்பை சேர்ந்த ஆஷாராணி எனும் அந்த இளம்பெண் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் 12,000 கிலோ எடையுள்ள டபுள் டக்கர் பேருந்தை தனது தலை முடியில் கட்டி மிக சாதாரணமாக இழுத்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.

 

இதற்கு முன் பளுதூக்குதல் உட்பட ஏழு உலக சாதனைகளை படைத்துள்ளார். அதில், 2013ஆம் ஆண்டில் 1,700 கிலோ எடையுள்ள வாகனத்தை தனது காதுகளால் இழுத்து சாதனை படைத்துள்ளார். புதிய சாதனை புரிந்து அதன் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

 

மன வலிமையும் உடல் வலிமையும் மிக்கவர்கள் பெண்கள் என நிரூபித்துள்ளார்.

 

Right Menu Icon