ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்..!
தென்காசி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வாசலில் சில்லறை குறைவு ஊராட்சி இரண்டாவது உறுப்பினராக உள்ள மகேஸ்வரி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்துக் காப்பாற்றிய காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஊராட்சி தலைவர் தன்னையும், தன் குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் ஊராட்சியில் அனைவரும் தட்டி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இது குறித்த புகார் கூறப்பட்டுள்ள ஊராட்சித் தலைவரிடம் கேட்ட பொழுது மகேஸ்வரி வட்டிக்கு பணம் கொடுத்தல் வாங்கல் தகராறில் ஏற்பட்ட மோதலில் தவறாக தன் மீது பொய் புகார் கூறியுள்ளதாக கூறினார். அதிக வட்டி கேட்பதாக சென்ற வாரத்தில் அவரது உறவினர்கள் மகேஸ்வரி மீது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





