தலையில் முடியை நடும் சிகிச்சையில் குறைபாடு..!
தலை முடி பிரச்சனை தொடர்பாக சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு ஒப்பந்தத்திற்கு மாறாக செயல்பட்டதால் இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூரைச் சேர்ந்த ஒரு நபர் தலையில் ஏற்பட்டிருந்த வழுக்கை பிரச்சனையை சரிசெய்ய சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் அழகு மருத்துவமனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சைக்கு பிறகு அவரது தலை முன்பை விட மோசமாகியுள்ளது.
தொடர் சிகிச்சை வழங்க தனியாக பணம் செலுத்த வேண்டும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் புகார்தாரர்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக தனியார் அழகு மருத்துவமனை செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அந்த மருத்துவமனையின் சேவை குறைபாட்டிற்காக புகார்தாரர்கள் மீது 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என அரியலூர் மாவட்டம் நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.





