இந்தியாவில் வரும் 13ஆம் தேதி தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது..!
இந்தியாவில் வரும் 13ஆம் தேதி முதல் பெருந்தொற்று தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட உள்ளது. பெருந்தொற்று காலத்திற்குள் ஊசியை செலுத்தியதற்கான ஒத்திகை இரண்டாம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
தொடர்ந்து சீரம் இன்ஸ்ட்டிட்யூட்டின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிக்கும் கடந்த 3ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த 10 நாட்களுக்குள் பெருந்தொற்று தடுப்பூசி விநியோகத்திற்கு தயார் என்று கூறியுள்ளார்.
கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய 2 பெருந்தொற்று தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதிப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி என்றும், அப்படி எந்தவிதமான தடையும் அறிவிக்கப்படவில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.






