--- --:--:-- --

கணவன் கைவிட்டுச் சென்றதால் மனைவி எடுத்த விபரீத முடிவு.. கொந்தளித்த உறவினர்கள்..!

3

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கைவிட்டுச் சென்ற கணவனின் வீட்டின் முன்பு மனைவியின் உடலை அவரது உறவினர்கள் எரியூட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. புவனேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் ஆன ஓர் ஆண்டில் விட்டுச் சென்ற பழநி ராஜன் என்பவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வெளி மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார்.

 

இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி தனது தந்தை வீட்டிலேயே வசித்து வந்த நிலையில் வீட்டிற்கு அருகே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் துயரத்திற்கு உள்ளான உறவினர்கள் பழனிராஜனின் வீட்டின் முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தொடர்ந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு ஒப்படைக்கப்பட்ட புவனேஸ்வரியின் உடலை அவரது உறவினர்கள் பழனிராஜனின் வீட்டிற்கு முன்பு வைத்து தகனம் செய்தனர்.

 

Right Menu Icon