ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் இரண்டு தொழிற்சாலைகள் திறப்பு..!
தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் இரண்டு புதிய தொழிற்சாலைகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பெருந்துறை சிப்காட்வதாகத்திலும் திருப்பூர் பகுதியிலும் இந்த இரண்டு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன. தற்பொழுது திறக்க வைக்கப்பட்டுள்ள இரண்டு தொழிற்சாலைகள் மூலமாக சுமார் 7000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தொழில் முன்னேற்றத்தில் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதற்கு ராம்ராஜ் காட்டன் தொடர்ந்து பாடுபடும் என்றும் அதன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் தெரிவித்தார்.





