--- --:--:-- --

இறந்த மீனின் வயிற்றில் உயிருடன் இருந்த ஆமை..!

13

ராய்ச்சிக்காக பிடிபட்ட மீனின் வயிற்றில் உயிருடன் ஆமை இருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதனை பத்திரமாக மீட்டு உள்ள சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த உயிரியலாளர்கள் அந்தப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

 

மேலும் பிடிபட்ட மீன்களில் இருந்து ஆராய்ச்சிக்காக மாதிரிகளை எடுத்து வந்துள்ளனர். அப்போது பிடிபட்ட மீனின் வயிற்றில் அசைவு தெரிவதை கண்டுள்ளனர். அதனை தொடர்ந்து பிடிபட்ட மீனை பத்திரமாக ஆராய்ச்சிக் கூடத்திற்கு உயிரியலாளர்கள் எடுத்து வந்துள்ளனர்.

 

அங்கு அதனை சோதனை செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது. அந்த மீனின் வயிற்றில் ஆமை குஞ்சு இருப்பதை கண்டனர். ஆய்வின் முடிவில் இரண்டு அடி வரை வளரக்கூடிய மீன் தனது அகன்ற வாயால் ஆமை குஞ்சை அப்படியே விழுங்கி இருப்பது தெரியவந்தது.

 

மீன்களின் வயிற்றில் ஆமையை பார்ப்பது அரிதானது என்று ஆராய்ச்சி செய்த உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மீனின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஆமை குஞ்சு உயிருடன் இருந்தது. அதனை பத்திரமாக கடலுக்குள் பட்டதாக உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Right Menu Icon