இந்த மாதமே கொரோனா மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது..!
இந்த மாதமே கொரோனா மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அது வரும் அக்டோபரில் உச்சத்தை தொடும் என ஹைதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடத்தப்பட்ட ஆய்வில் மூன்றாவது தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உச்சபட்ச தொற்று எண்ணிக்கை ஒன்றரை லட்சம் வரை போகும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இரண்டாவது அலையின் போது தினசரி 4 லட்சத்தை தாண்டியது. இரண்டாவது அலை போன்ற அளவுக்கு மூன்றாவது அலை தீவிரமாக இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகம் பாதித்த கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மூன்றாவது இப்போதுள்ள நிலைமை தலைகீழாக மாறும் எனவும் அவர்கள் கணித்துள்ளனர்.







