இ-ருபி என்ற புதிய மின்னணு பணப்பரிவர்த்தனை முறை தொடக்கம்..!
இ-ருபி என்ற பெயரிலான புதிய மின்னணு பணப்பரிவர்த்தனை முறையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ரொக்கப்படி பணபரிவர்த்தனை குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் சேவை வழங்குவோரையும், சேவையை பெறுவோரையும் மின்னணு முறையில் கிடைக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அரசின் நலத்திட்டங்கள் உரியோருக்கு சென்று சேர இ-ருபி முறை வெகுவாக உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது . இந்த திட்டத்தின்படி பயனாளிகள் இணைய வழியில் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தினால் அதற்கான வவுச்சர் எனப்படும் செய்து எஸ்எம்எஸ் அல்லது க்யூ ஆர் கோடு குறியீடு வடிவில் அனுப்பப்படும்.
பின்னர் எந்த இடத்தில் பணம் செலுத்த தேவை இருக்கிறதோ அங்கு இந்த வவுச்சர்களைக் கொண்டு செலுத்தலாம். பணம் செலுத்த டெபிட், கிரெடிட் கார்டு, மொபைல் ஆப் போன்ற எதுவும் அவசியமில்லை மொபைல் போன்கள் இல்லாவிட்டாலும் சரியான வவுச்சர் விவரம் இருந்தால் பணம் செலுத்தி விட முடியும்.







