--- --:--:-- --

கல்லால் தாக்கிய விவசாயி படுகொலை..!

5

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வரப்பு தகராறு கல்லால் தாக்கிய விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வாழப்பாடியை அடுத்த கணு காரணி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் இடையே விலை நிலத்தில் வரப்பு தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விவசாயி ராஜா வழக்கம்போல் தனது விளை நிலத்தின் அருகே மராமத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

 

அப்பொழுது அங்கு வந்த ஈஸ்வரன் அவரை கல்லால் தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராஜாவை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக உறவினர்கள் விவசாயி ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

 

Right Menu Icon