லாரி விபத்தில் கணவனை இழந்த மனைவி.. கைக்குழந்தையுடன் தவிக்கும் அவலம்..!
மேகாலயாவில் ஏற்பட்ட லாரி விபத்தில் கணவனை பலி கொடுக்க ஆதரவின்றி 2 குழந்தைகளுடன் தவிக்கும் அவரது மனைவிக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என இளைஞரின் குடும்பத்தினர் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் கடந்த 24ஆம் தேதி லாரி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த நிலையில் விமான மூலம் அவரது உடலை கொண்டுவர பலர் 99 ரூபாய் க்யூ ஆர் கோடு மூலம் அனுப்பி நிதி உதவி அளித்தனர்.
இதனையடுத்து விமானம் மூலம் மணிகண்டன் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கணவனை இழந்து கை குழந்தை உட்பட இரண்டு குழந்தைகளுடன் தவிக்கும் மணிகண்டனின் மனைவிக்கு அரசு நிதி உதவி அளித்து உதவ வேண்டும் என அவரது குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.






