சாலையில் ஓடிய கழிவு நீர்.. வாகன ஓட்டிகள் அவதி..!
சேலத்தில் சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அணை மேடு பகுதியிலிருந்து சாக்கடை அமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
இதற்காக சாலைகள் தோண்டப்பட்ட நிலையில் சாக்கடை அமைப்பு பணிகள் குறைந்த வேகத்தில் நடந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனால் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறு போல பாய்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.






