வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்.. அழுகி கிடந்த அண்ணன், 2 தங்கைகள்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கையை கொலை செய்துவிட்டு அண்ணனும் அக்காவும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாபு என்பவர் தனது இரண்டு தங்கைகளுடன் வசித்து வந்தார். தங்கைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பாபு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பாபுவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முதல் தங்கையான உஷா பார்வதி கழுத்தில் நெறிக்கப்பட்டு இறந்து கிடந்தார்.
அவருக்கு அருகில் பாபு மின்விசிறியில் தூக்கிட்டும் மற்றொரு தங்கை ஸ்ரீதேவி சமையலறையில் தூக்கிட்டும் சடலமாக இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கடவுள் பக்தி அதிகம் நிறைந்தவரான பாபு மாந்திரீக மூடநம்பிக்கையால் தற்கொலை செய்து கொண்டு தங்கைகளை கொலை செய்தாரா அல்லது திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






