விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக விநாயகர் சிலைகள் இலவசமாக வழங்கப்பட்டது
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இலவசமாக வழங்கப்பட்டது.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அனைத்து மக்களுக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டு சேர்க்கும் வகையில், வீடுதோறும் விநாயகர், வீதி தோறும் விநாயகர் என்ற சிந்தனையுடன் தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு சார்பாக கோவை விஸ்கோஸ் காலனி,சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு இலவசமாக ஒரு அடி விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டது.
இதற்கான விழா மாநில ஒருங்கிணைப்பாளர் டில்லி பாபு தலைமையில் மாவட்ட தலைவர் கருணாம்பிகை முன்னிலையில் நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மகளிர் அணி செயலாளர் சுகன்யா அனைத்து மக்களிடையேயும் இந்து மதத்தின் பெருமைகளை கொண்டு கொண்டு சேர்க்கும் விதமாகவும், விநாயகர் சதுர்த்தியை அனைத்து மக்களும் கொண்டாடும் விதமாக இந்த களிமண்ணால் ஆன சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை நாங்கள் இலவசமாக வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.
மேலும்,தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது போன்று வழங்கி வருவதாகவும் கோவையில் முதன்முறையாக இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





