--- --:--:-- --

கேம் விளையாடிய மகனுக்கு நள்ளிரவில் தந்தை கொடுத்த தண்டனை..!

6

சீனாவில் செல்போன் வீடியோ கேமை விளையாடிய 11 வயது மகனை நூதன முறையில் தண்டிக்க எண்ணிய அவரது தந்தை இடைவிடாது தொடர்ச்சியாக 17 மணி நேரம் கேம் விளையாட வைத்துள்ளார்.

 

அந்த சிறுவன் இரவில் நீண்ட நேரம் செல்போன் கேம் விளையாடும் பழக்கத்தை கொண்டிருந்துள்ளான். பலமுறை கண்டித்து பார்த்த தந்தை வழக்கம்போல் கேம் விளையாட விட்டு அப்படியே சோர்ந்து தூங்கிவிட்ட மகனை நள்ளிரவு ஒரு மணிக்கு எழுப்பி மறுநாள் மாலை 6 மணி வரை தூங்க விடாமல் தொடர்ச்சியாக விளையாட வைத்துள்ளார்.

 

தொடர்ந்து 17 மணி நேரம் கேம் விளையாடி சோர்ந்து போன சிறுவன் வாந்தி எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிறகே அவனை அவனது தந்தை விடுவித்துள்ளார். வீடியோ கேம் மீது ஒரு சலிப்பு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த தண்டனையை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon