கப் நூடுல்ஸ் சாப்பிட்ட அக்கா தம்பிக்கு விபரீதம்..!
சிவகங்கை மாவட்டத்தில் காலாவதியான நூடுல்ஸை பெற்றதாக எழுந்த புகாரில் தனியார் பல்பொருள் அங்காடியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
புதூர் பகுதியில் வசித்து வரும் ருத்ர பிரியன், ஆசால் இருவருக்கு கப் நூடுல்ஸ் சாப்பிட்ட பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நூடுல்ஸ் டப்பாவை எடுத்து பார்த்த பொழுது அது காலாவதியாக இருந்தது தெரிய வந்தது.





