பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுப்பு தெரிவித்த கடைக்காரர்
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்துள்ள கொளத்தூர் காவேரிபுரம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் முடி திருத்தம் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த பகுதியில் 3க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்தால் வேறு நபர்கள் வரமாட்டார்கள் எனக் கூறி சலூன் கடைக்காரர் ஒருவர் திருப்பி அனுப்பியுள்ளார். சலூன் கடைக்காரர் நீங்கள் புகார் வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் முடி திருத்தம் செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார். வீடியோ ஆதாரத்துடன் சேலம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் அந்த நபர் புகாரை அளித்துள்ளார். அப்பொழுது முடி வெட்டவில்லை என்றால் விட வேண்டியது தானே புகார் கொடுத்தவரை அவமதித்த டிஎஸ்பி இன் ஆடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.





