சூறாவளியால் இரண்டாக உடைந்த கப்பல்..!
ஹாங்காங் அருகே புயலில் சிக்கிய கப்பல் நடுக்கடலில் படிப்படியாக மோதும் காட்சி இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. கப்பலில் சிக்கியுள்ள 30 ஊழியர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியை கடலோர காவல் படையினர் மேற்கொண்டனர்.
30 ஊழியர்களுடன் கப்பலில் சென்று கொண்டிருந்த போது ஹாங் காங்கில் பலத்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் காற்றின் வேகம் அதிகமானதால் நிலைதடுமாறிய கப்பல் படிப்படியாக கடலில் மூழ்கியது.






