SDPI கட்சி மதுரை மாவட்டத்தில் கொரனா உதவி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மதுரையில் SDPI கட்சி கொரனா உதவி குழு ஆலோசனை கூட்டம் சமூக இடைவெளியுடன் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.கட்சியின் தன்னார்வலர்களை மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்று பேசினார்.
கட்சியின் கொரனா உதவி குழு துணை ஒருங்கிணைப்பாளர் பகுர்தீன் முன்னிலை வகித்தார்.ஆலோசனைக் குழுவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வடக்குப்பகுதி தலைவர் இஸ்ஹாக் அவர்கள் கொரனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த உடல்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அடக்கம் செய்வது பற்றி ஆலோசனை வழங்கினார்.
மேலும் SDPI கட்சியின் வர்த்தக அணி செயலாளர் Sak.ராஜா மருத்துவக் குறிப்பு பற்றி ஆலோசனை வழங்கினார். உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின் அடிப்படையில் தன்னார்வலர்களுக்கு மாத்திரை மற்றும் sanitizer வழங்கப்பட்டது.இறுதியாக மாவட்ட செயலாளர் சிக்கந்தர் நன்றி கூறினார்.







