13 கோரிக்கைகளை முன்வைத்து வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்..!
ஆட்டோக்களைப் போல் கால் டாக்ஸிகளுக்கும் அரசே வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்றும், நாளையும் வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.
ஓலா, உபர், ராப்பிடோ போன்ற செயலிகளை போல தமிழக அரசின் வாடகை வாகன செயலியை உருவாக்க வேண்டும் என ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்வது போல கால் டாக்ஸிகளுக்கும், டாடா ஏஸ் வாகனங்களுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர, நான்கு சக்கர டாக்ஸி சேவையும் தடை செய்ய கோரிக்க வைக்கப்பட்டுள்ளது.





