நவராத்திரி விழாவை தொடங்கி வைத்த முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின்..!
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மயிலாத்தூர் கபாலீஸ்வரர் கோயில் மண்டபத்தில் 10 நாட்கள் நடைபெறும் விழாவில் பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.
இதில் கண் கவரும் வகையில் ஆயிரக்கணக்கான பொம்மைகள் 10 அடுக்குகளாக இடம் பெற்றுள்ளன. கொலு பொம்மைகளை பார்வையிட்டு நவராத்திரி விழாவை தொடங்கி விட்ட துர்கா ஸ்டாலின் திருக்கோவில் சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்களை பரிசாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தனலட்சுமி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.





