--- --:--:-- --

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் 1000 ஆண்டுகள் நீடிக்கும் வகை கற்களால் கட்டப்படும்..!

4

யோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் கற்களால் தான் கட்டப்பட்டு வருகிறது என்று கோவில் கட்டுமானத்தை மேற்கொண்டுள்ள அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் சென்னை ஐஐடி மத்திய கட்டட ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் மிகப்பெரிய நிபுணர்கள் ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

லேர்சனன் டவ் ப்ரோ நிறுவனம் பொதுவாக கட்டுமான பணிகளை கவனித்து வந்தாலும் அயோத்தி கோவில் நிலத்தின் மண்வளம் நிலநடுக்கத்தை தாங்கும் வலிமை போன்றவை சென்னை ஐஐடி நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

 

கோவில் கற்களால் தான் கட்டப்படுகிறது என்று பத்தாயிரம் தாமிரக் கம்பிகள் தேவைப்படுவதாகவும் கூறிய சம்பத் ராய் பக்தர்கள் தாமிரக் கம்பிகளை கோவிலுக்கு தானமாக வழங்கலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon