காவலர் தேர்வில் த.வெ.க. அரசின் அறிவிப்பு பெரும் அநீதியாகும்: அன்புமணி ராமதாஸ்
காவல்துறை பணியில் சேர இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் ஓராண்டு முழுவதும் காவலர் தேர்வு நடத்தப்படாது என்ற அறிவிப்பு பெரும் அநீதியாகும். 2025ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வருடத்திற்கான காவலர் தேர்வு அட்டவணையை வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிட முடியவில்லை என்றால், பி.சி, எம்.பி.சி. மற்றும் எஸ்.சி/எஸ்.டி. மக்களுக்கான வயது வரம்பினை தவெக அரசு உயர்த்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை






