அரிவாளுடன் புதைக்கப்பட்ட ரவுடி துரைமுத்துவின் உடல்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடியை துறைமுத்துவின் உடலை வீச்சரிவாள் உடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலக்கரை என்ற இடத்தில் காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசிய துறைமுத்து அதே வெடிகுண்டால் உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து துறைமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான வெல்லூரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது துறைமுத்தின் உடல் மீது நீளமான வீச்சரிவாள் வைத்து உறவினர்கள் அடக்கம் செய்தனர்.







