சர்வதேச தரத்திலான விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் – விஜய் ஆலோசனை
முதல்வர் விஜய் தலைமையில் இன்று (15.7.2026) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சர்வதேச தரத்திலான விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. மேலும், மாவட்ட வாரியாக விளையாட்டு வீரர்களை உருவாக்குவது குறித்தும் ஒலிம்பிக் அகாடமியை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (15.7.2026) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.






