இன்று மாலை 6 மணிக்கு எஸ்பிபிக்காக நடைபெறும் கூட்டுப் பிரார்த்தனை..!
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் உடல் நலம் பெற்று விரைவில் மீண்டு வர வேண்டி இன்று மாலை 6 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொரொனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஐந்தாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 13 ஆம் தேதி இரவு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
மருத்துவர் குழுவினர் தீவிரமாக எஸ்பிபியின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்பிபி உடல் நலம் பெற்று விரைவில் மீண்டு வர வேண்டி மாலை 6 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதில் ரஜினி, கமல், ஏ ஆர் ரகுமான், இளையராஜா என திரைத்துறையினர் ரசிகர்கள் பங்கேற்க வேண்டுமென பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் இசையமைப்பாளர் இளையராஜாவும், எஸ்பிபிக்கான கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்கும்படி ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல் ஒப்பற்ற கலைஞனான எஸ்பிபி மீண்டும் வர வேண்டி செய்யும் பிரார்த்தனையில் எல்லோரும் பங்கேற்க வேண்டுமென இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், ஏ ஆர் முருகதாஸ், நடிகர் கார்த்தி என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.







