--- --:--:-- --

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

02

கஸ்ட் 23 ஆம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், ஏனைய தமிழக பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு வேளைகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டில் நேற்று 6 இடங்களில் வெயில் சதமடித்தது. பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி விமான நிலையத்தில் தலா 102 டிகிரி பாரன்ஹீட்டும், கரூர் பரமத்தி, ஈரோடு, மதுரை விமான நிலையத்தில் தலா 100 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon