--- --:--:-- --

சுண்டைக்காய் பறித்ததால் ஏற்பட்ட பிரச்சனை தற்கொலையில் முடிந்துள்ளது…!

2

ள்ளக்குறிச்சியில் சுண்டைக்காய் பிரச்சினைக்கு தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியை சிறந்த சுரேஷ் என்பவரின் மகள் தனது வீட்டின் பின்புறம் கழிவுநீர் வாய்க்கால் கரையில் உள்ள செடியில் சுண்டைக்காயை பறித்துள்ளார்.

 

அப்போது அதே பகுதியை சேர்ந்த குளஞ்சி என்பவர் அந்த பெண்ணை ஆபாசமாக பேசியதோடு பெண்ணின் தம்பியையும் தாக்கியுள்ளார். இதனால் பெண்ணின் தந்தை சுரேஷ் தனது மனைவியுடன் சென்று குளஞ்சியுடன் சண்டையிட்டுள்ளார்.

 

குளஞ்சியும் அவர்தம் மகனும் சுரேஷின் குடும்பத்தாரை திட்டியவாறு இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.இந்த சண்டையால் மனமுடைந்த சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon