பூக்கள், காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்வு..!
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ மல்லி 3 ஆயிரம் ரூபாய்க்கும், காட்டு மல்லி 2,000 ரூபாய்க்கும், முல்லைப் பூ 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கேரட் ரூ.70 க்கும். பீன்ஸ் 45 ரூபாய்க்கும், பீட்ரூட் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





