--- --:--:-- --

மாடி வீட்டில் பயங்கர தீ விபத்து.. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்..!

9

சென்னை சைதாப்பேட்டையில் இரண்டு மாடிகள் கொண்ட வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான இரண்டு மாடுகள் கொண்ட வீடு உள்ளது.

 

வீட்டில் உரிமையாளர் ராமகிருஷ்ணன் குடியிருந்து வரும் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்பு புகை வந்துள்ளது. வீட்டின் மேல் மாடியில் இருந்த நபர்கள் பயத்தில் அலறி அடித்தபடி வீட்டை விட்டு அங்கும் இங்கும் ஓடினார்கள்.

 

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு போலீசார் வீட்டின் மேல் பகுதியில் சிக்கியிருந்த பத்துக்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

 

Right Menu Icon