--- --:--:-- --

ராமர் விவாதப்பொருள் அல்ல அவர் ஒரு தீர்வு – பிரதமர் மோடி பேச்சு

1

யோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று பிராண பிரதிஷ்டை செய்தார். விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்பளே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மிகப்பெரிய முயற்சியால் ராமர் கோயில் சாத்தியமானது என்றார். ராமர் இனி கொட்டகையில் இருக்கமாட்டார், கோயில் கருவறையில் இருப்பார் என்று தெரிவித்த பிரதமர், மிகப்பெரிய முயற்சிக்குப் பிறகு ராமர் கோயில் இங்கு திறக்கப்பட்டுள்ளது என்றார்.

 

இறுதியாக நமது கடவுள் ராமர் இங்கு வந்துள்ளார் என்று பேசிய மோடி, ராமர் கோயில் இன்று திறக்கப்பட்ட பின்னர் நாட்டு மக்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கூறினார். சில நூறு ஆண்டுகளாக செய்த தியாகத்திற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

 

ஜனவரி 22-ஐ யாரும் மறக்கமாட்டார்கள் என்று பேசிய பிரதமர் மோடி, மிகப்பெரிய முயற்சியால் ராமர் கோயில் சாத்தியமானது என்றார். அடிமைத்தனத்தின் அடையாளம் நீங்கியுள்ளது என்று தெரிவித்த அவர், ராமரின் ஆசிர்வாதத்தினாலேயே இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.

 

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜனவரி 22-ஆம் தேதியை யாரும் மறக்க மாட்டார்கள் என்றும், கோயில் கட்ட ஆன தாமதத்தை ராமர் மன்னிப்பார் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஒவ்வொரு கிராமத்திலும் இன்று ராம கீதம் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும், நாடே இன்று தீபாவளி கொண்டாடுவதாக பேசினார். மிகப்பெரிய சட்டப் போராட்டத்தால் கோயில் சாத்தியமானது என்றும், நியாயம் வென்றதாக பிரதமர் மோடி பேசினார்.

 

தமிழ்நாடு கோயில்களுக்கு சென்றது பாக்கியமாக கருதுவதாக தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ராமநாதர் சாமி கோயில் மற்றும் தனுஷ்கோடிக்கு சென்றது தனது பாக்கியம் என்றார். சட்டங்களுக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளதாக பேசிய மோடி, நாட்டு மக்களின் மனதில் ராமர் குடியேறியுள்ளதாக தெரிவித்தார்.

 

ராமாயணத்தை பல்வேறு மொழிகளில் கேட்டதை பாக்கியமாக கருதுவதாகவும், பல நூற்றாண்டுகளாக அயோத்தி ராமருக்காக காத்திருந்ததாக கூறினார். கோயில் கட்ட காரணமான இந்திய நீதித்துறைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

Right Menu Icon