ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 3 ஆயிரத்து 300 ரூபாய்..!
வடகொரியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு கிலோ வாழைப்பழம் இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் ஊடகங்கள் கூறுகின்றனர்.
இதேபோன்று பல்வேறு பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் வட கொரியாவில் கடுமையான உணவு பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் கூறியிருந்த நிலையில் பொருட்களின் தாறுமாறான விலை உயர்வு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.






