--- --:--:-- --

சிறுமி கொலை பிரேத பரிசோதனை அறிக்கை.. தடயங்களை ஒப்படைத்த காவல்துறை..!

2

புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த 2ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.

 

இந்த விவகாரம் புதுச்சேரியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் விசாரணை அதிகாரியான எஸ்.பி. லட்சுமியிடம் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது.

 

இதனிடையே வழக்கை சேகரித்த தடயங்கள் மற்றும் ஆவணங்கள் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையை போக்சோ நீதிமன்ற நீதிபதியிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

 

Right Menu Icon