--- --:--:-- --

ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த தவெக தலைவர் விஜய்..!

1

டிகர் சங்க புதிய கட்டடம் கட்டுவதற்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமான பணிகளை நிறைவு செய்வதற்கு 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

 

இதற்கு நடிகர் சங்கம் சார்பில் வங்கியில் கடன் கேட்கப்பட்டபோது, குறைந்தபட்ச வைப்புத்தொகையாக 13 கோடி ரூபாய் டெபாசிட் செய்தால்தான் கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனைதொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார். அவரைதொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், கார்த்தி ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினர்.

 

இந்த நிலையில் நடிகர் விஜய் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். வங்கிக் கணக்கு மூலம் நடிகர் சங்கத்திற்கு விஜய் அனுப்பியுள்ளார். இதுவரையில் சுமார் 12 கோடி ரூபாய் நிதி நடிகர் சங்கத்திற்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Right Menu Icon